கிருஷ்ணகிரியில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4289 days ago
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பழையபேட் டையில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி திருவிழா கடந்த 6--ம் தேதி துவங்கியது. தின மும் காலை சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் பஜனை பாடல் களும் நடத்தப்பட்டு வரு கிறது.
விழாவின் முக்கிய நாளான சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக் கப்பட்ட திருமண மேடையில் ராமரும் சீதாவும் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.