உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக நாளை சிறப்பு பூஜை

உலக நன்மைக்காக நாளை சிறப்பு பூஜை

திருவள்ளூர்: புங்கத்துார், முத்துமாரியம்மன் கோவிலில், நாளை, 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. திருவள்ளூர், புங்கத்துாரில், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, உலக மக்களின் நன்மைக்காக, நான்காம் ஆண்டு, 108 திருவிளக்கு பூஜை, நாளை 18ம் தேதி நடைபெறுகிறது. பூஜையில் கலந்து கொள்ளும் சுமங்கலிகளுக்கு, வைத்திய வீரராகவர் கோவில், சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட, வெண்கல குத்து விளக்குகள் வழங்கப்படும். நாளை, 18ம் தேதி, மாலை 5:30 மணிக்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையில், ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !