படவேட்டம்மன் கரிக்கோலத்தில் வலம்: இன்று கும்பாபிஷேகம்!
ADDED :4225 days ago
பள்ளிப்பட்டு: நூற்றாண்டு பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவிலில், இன்று, கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று, கரிக்கோலத்தில் மூலவர் அம்மன் மற்றும் பஞ்சலோக உற்சவர் வலம் வந்தார். பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை, கொற்றலை ஆற்றங் கரையில் அமைந்துள்ளது, நூற்றாண்டு பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில். கோவில் சீரமைப்பு கடந்த ஆறு மாதமாக நடந்து வந்தது. பணிகள் தற்போது நிறைவடைந்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை நடந்து வருகிறது. நேற்று, மூலவர் சிலை மற்றும் பஞ்சலோக உற்சவர் சிலை கரிக்கோலம் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் நெல்லில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, கோ பூஜை நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி நடத்தப்பட்டது. இன்று, காலை ௮:௦௦ மணியளவில், கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வாண வேடிக்கையுடன், அம்மன் வீதியுலா வருகிறார்.