சிம்ம வாகனத்தில் சந்தான கோபாலன் உலா!
ADDED :4225 days ago
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான, நேற்று முன்தினம், சந்தான வேணுகோபாலன், சிம்ம வாகனத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி சுவாமி, அம்ச வாகனம், யானை, குதிரை என, பல்வேறு வாகனங்களில் வலம் வருகிறார். உற்சவத்தின் இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் மாலை சிம்ம வாகனத்தில் உலா வந்தார். திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். நாளை, மாலை கருட வாகனத்தில் சுவாமி சேவை சாதிக்கிறார்.