உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை

அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் கருடசேவை நடைபெற்றது.  இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதைத் தெõடர்ந்து காலை 6 மணிக்கு கருடசேவை புறப்பாடு நடைபெற்றது.  வரும் 27ஆம் தேதி இரவு பெருமாள் புஷ்பப்பல்லக்கில் வலம் வருவதோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !