மார்த்தாண்டன்விளை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் விழா தொடக்கம்
ADDED :4230 days ago
களியக்காவிளை : குழித்துறை அருகேயுள்ள ஈத்தவிளை, மார்த்தாண்டன்விளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் 32 ஆம் ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 18) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
முதல்நாள் விழாவில் காலை 8 மணிக்கு அகண்டநாம ஜெபம், மாலை 6 மணிக்கு பார்வதிபுரம் சாரதா ஆசிரமத்தைச் சேர்ந்த சகோதரி அன்புமதி தலைமையில் திருவிளக்கு பூஜையும், இரவு 9.30 மணிக்கு சுதர்ஸன ஹோமமும் நடைபெறும். 2 ஆம் நாள் விழாவில் மாலை 4.30 மணிக்கு ராகுகால துர்க்கா பூஜை நடைபெறும். 5 ஆம் நாள் விழாவில் காலை 10.30 மணிக்கு பொங்காலை வழிபாடு நடைபெறும்.