சிதம்பரம் விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :4292 days ago
சிதம்பரம் : சிதம்பரம் மெய்க்காவல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபொற்பாத விநாயகர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைப் பெருவிழாவில், உலக நன்மை வேண்டி நேற்று முன்தினம் விளக்கு பூஜை இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக, காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் ,பிற்பகல் அன்னதான நிகழ்ச்சியும், மாலை திருஊஞ்சல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.