உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம்

கரூர்:  கரூர் மாவட்டம், நொய்யலில்  செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா 17--ம் தேதி  நடை பெற்றது.செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி இரவு 11 மணிக்கு மேல் அம்மனுக்கு காப்புகட்டும் திருவிழா தொடங்கியது. 13-ந் தேதி இரவு 8 மணிக்கு மேல் ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடை பெற்றது.முக்கிய நிகழ்ச்சியாக  நேற்று (வெள்ளிக்கிழமை)  தேரோட்டம் நடந்தது.   தொடர்ந்து இரவு சுமார் 12 மணிக்கு பூசாரியப்பன் அரிவாள் மீது ஏறி முக்கிய வீதிகள் வழியாக சென்று செல்லாண்டியம்மன் கோவிலை சென்றடைந்தார்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !