விஸ்வரூப முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :4231 days ago
அவலூர்பேட்டை: எய்யில் ஊராட்சி மதுரா எதுவாப்பேட்டை கிராமத்தில் விஸ்வரூப முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக, கோ பூஜை, முனீஸ்வரர் சகஸ்ரநாம அர்ச்சனை ஹோமங்கள் நடந்தன. 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அவலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.