உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் லட்ச தீப திருவிழாவில் கர்நாடக இசைக் கச்சேரி!

விழுப்புரம் லட்ச தீப திருவிழாவில் கர்நாடக இசைக் கச்சேரி!

விழுப்புரம்: விழுப்புரம் லட்ச தீப திருவிழாவில் தர்ஷினி இசைப்பயிலக மாணவ மாணவிகளின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் 91ம் ஆண்டு லட்சதீப மகா உற்சவ பெரு விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் விழுப்புரம் மஞ்சுகண்ணனின் தர்ஷினி இசைப்பயிலக மாணவ, மாணவிகளின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் ராமர் கல்வி அவதாரத்தில் ஆஞ்சநேய சுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி பட்டா பிஷேகம் அலங்காரத்தில் கோவில் குளத்தில் வாண வேடிக்கையுடன் தெப்ப உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !