உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் சித்திரை ரத உற்சவம்

திரவுபதியம்மன் கோவில் சித்திரை ரத உற்சவம்

உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேர் உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 1ம் தேதி காலை 7.30 மணிக்கு கோவிலில் கொடியேற்றம் நடந்தது. 11ம் தேதி காலை 7.30 மணிக்கு திரவுபதியம்மன் சுவாமிக்கும், அர்ஜூனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அன்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது. 15ம் தேதி இரவு 7 மணிக்கு அரவான் கடபலி நடந்தது. 16ம் தேதி காலை 9.10 மணிக்கு திரவுபதியம்மன், அர்ஜூனன் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட் சியளித்தனர். தேரை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் துவக்கி வைத்தார். இரவு கரக உற்சவம் நடந்தது. 19ம் தேதி பகலில் மஞ்சள் நீர் உற்சவம், இரவு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமசாமி மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !