மகிமாலீஸ்வரர் கோவில் திருத்தேர் பெருவிழா!
ADDED :4230 days ago
ஈரோடு: ஈரோடு, மங்களாம்பிகை உடனுறை மகிமாலீஸ்வரர் கோவிலில், அப்பர்-சித்திரை சதய, 38ம் ஆண்டு விழா மற்றும் திருத்தேர் பெருவிழா, கடந்த, 17ம் தேதி துவங்கியது. ஏப்., 24ம் தேதி அப்பரடிகள் ஆராதனை விழா, 25ல் தேவார பண்ணிசை விழா, 28ம் தேதி திருத்தேர்விழா நடக்கிறது. திருத்தேர் விழாக்குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.