வேடநத்தத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4230 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட் டம் கீழ்பென்னாத்தூர் , வேடநந்தம் கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விநாயகர் பூஜை, அம்மன் கண்திறப்பு, அம்மன் மற்றும் நவக்கிரக சிலைகள் கரிக்கோல ஊர் வலம் நடந்தது. .நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை நடத்தி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.