உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி உமையாள் அம்மன், கோவில் கும்பாபிஷேகம்

சக்தி உமையாள் அம்மன், கோவில் கும்பாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை அருகே கோச்சடை பகுதியில் சக்தி உமையாள் அம்மன், முத்தையா சுவாமி கோவில்   கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு கொடிபூஜை, நாடிசந்தனம் ஜெபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.   காலை 9.30 மணிக்கு மேல் கோபுர உச்சியில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூரண கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் நடந்தது.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !