ஆறுமுகநேரி வடபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4230 days ago
ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மூலக்கரை வடபத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 15--ம் தேதி காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு கோவில் விமானம் மற்றும் அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, இரவில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.