கடலூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் திருவிழா
ADDED :4230 days ago
கடலூர் : திருப்பாதிரிப்புலியூர், வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 30ம் தேதி வரை நடக்க உள்ள திருவிழாவில், தினமும் காலையில், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடக்கிறது. தினசரி மாலையில், சுவாமி வீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், நிர்வாகிகள் செய்துள்ளனர்.