திருமாலும் சிவராத்திரியும்!
ADDED :4586 days ago
திருமால் பன்றி அவதாரமெடுத்து சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற இரவே சிவராத்திரி என்பது பல இலயக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அநேகமாக எல்லா சிவன்கோயில்களிலும் அமைந்துள்ள லிங்கோற்பவ திருவுருவங்களில், மேற்சொன்ன வரலாற்றை விளக்கும் திருமாலை முழுப்பன்றி வடிவத்தில் அல்லது பன்றி முகத்துடன் கூடியவராக அமைத்துள்ளனர். இதற்கு முற்றிலும் மாறாக, சிவலிங்கத்தினின்று வெளிப்படும் சிவபெருமானையும், அவரை திருமால் முழு தேவ வடிவில் மண்டியிட்டு வணங்கிப் பூசிக்கும் நிலையிலும் அமைந்த திருவுருவத்தை தஞ்சை பெரிய காண்கிறோம். இது ஓர் ஊழிக்காலத்தில் நீண்ட இரவில் திருமால் சிவபூஜை செய்ததையும், சிவபெருமான் அவருக்கு லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள்பாலித்ததையும் குறிக்கும் சிற்பம் என்றும் கூறுவர்.