உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதன் முறையாக ஓட்டளித்த திருவண்ணாமலை சாதுக்கள்!

முதன் முறையாக ஓட்டளித்த திருவண்ணாமலை சாதுக்கள்!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை ஆன்மிக நகரமாக விளங்கி வருவதால் வெளியூரில் இருந்து வரும்  சாதுக்கள் இங்கேயே தங்கிவிடுகின்றனர்.  இதில் அவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை. ஓட்டளிக்கவும் அனுமதிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் சாதுக்கள்  ஒன்று கூடி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அவர்கள் ஓட்டளிக்க பரிசீலிக்குமாறு  கோர்ட் உத்தரவிட்டது.  இதையடுத்து  அவர்கள் வாக்காளர்களாக  சேர்க்க , அவர்கள் தங்கியுள்ள இடங்களையே முகவரியாக சேர்க்கலாம் என முடிவு செய்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதன்படி   357 சாதுக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி, ஆணாய் பிறந்தான் பள்ளி ஆகிய பள்ளிகளில்  முதன்முறையாக நேற்று அவர்கள் ஓட்டளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !