உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோவில் "ரோப்கார் மீண்டும் இயக்கம்!

பழநி கோவில் "ரோப்கார் மீண்டும் இயக்கம்!

பழநி: பழநி மலைக்கோவில், "ரோப்கார் மூன்று நாட்கள் பராமரிப்பு பணிகளுக்கு பின், இன்று முதல் இயக்கப்படவுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி கோவிலில் ரோப்கார், தினமும் காலை, 7:00 முதல், இரவு, 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில், மூன்று நிமிடங்களில் மலைக்கோவிலுக்கு சென்று விட முடியும். இதில் பயணம் செய்ய,பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மூன்று நாட்களாக, ரோப்கார் பராமரிப்பு பணிகள் நடந்தன. உருளைகள், கம்பி வடக் கயிறுகள் மாற்றப்பட்டன; ஆயில், கிரிஸ் போட்டு, பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டன. இதையடுத்து, ரோப்கார் பெட்டிகளில் எடைக்கற்களை ஏற்றி, சோதனை ஓட்டம் நேற்று மாலை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, ரோப்கார் இன்று முதல் இயக்கப்படவுள்ளதாக, பழநி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !