உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1985ல் காணாமல் போன... குருவாயூர் கோவில் நகை கண்டெடுப்பு!

1985ல் காணாமல் போன... குருவாயூர் கோவில் நகை கண்டெடுப்பு!

குருவாயூர்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், 1985ல் காணாமல் போன, சுவாமியின், 160 கிராம் எடையுள்ள மூன்று ஆபரணங்களில், ஒரு ஆபரணம் நேற்று கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவில் மூலஸ்தானத்தை ஒட்டியுள்ள கிணற்றில் தண்ணீர் வற்றியதால், அதை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு கிடந்த, 60 கிராம் எடையுள்ள, "நாகபடத்தாலி என்ற சங்கிலி கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் அந்த கிணறு வற்றியது. அப்போதும் தூர்வாரப்பட்டது. அப்போது கிடைக்காத நகை, இப்போது கிடைத்துள்ளது, பக்தர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !