உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி புவனேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா!

புதுச்சேரி புவனேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா!

புதுச்சேரி: ராதாகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரில் புவனேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 42ம் ஆண்டு சித்திரை பெருவிழா பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை மின் அலங்காரம், நாக வாகனம், சிங்க வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று 25ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தேர் திருவிழாவும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று, மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. பகல் 12 மணிக்கு பால் சாகை வார்த்தலும், மாலை 4.30 மணிக்கு செடல் திருவிழாவும் நடந்தது. இன்று 26ம் தேதி காலை அபிஷேகமும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8.30 மணிக்கு தெப்பல் உற்சவம் மின் அலங்காரத்துடன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும்  ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !