திரவுபதியம்மனுக்கு அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு!
ADDED :4185 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் கொட்டியாம்பூண்டியில் திரவுபதியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்தல் மற்றும் 108 சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு கோபூஜை, லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், வஸோத்தாரா ஹோமம் நடந்து 9 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதி, 108 சங்காபிஷேகம், கலாசாபிஷேகம் நடந்து. ஜோதிடர் கமலக்கண்ணன் தலைமையில் அம்மனுக்கு வெள்ளி கவசம், கிரீடம் அணிவித்து பூஜைகள் செய்தனர் . யாகசாலை பூஜைகளை பாபு குருக்கள் செய்தார். விழா ஏற்பாடுகளை கமலக்கண்ணன் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.