வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து ராஜாஜி நகரில், புதியதாக கட்டப்பட்ட வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி காலை, 6 மணிக்கு தேவி பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 7 மணிக்கு மும்மூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. 24ம் தேதி மாலை, 4 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 8 மணிக்கு மஹாபூர்ணாஹீதி, 8.15 மணிக்கு கலசப்புறப்பாடும், 8.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9 மணிக்கு, ஸ்ரீவித்யா கணபதி நவக்ரஹம், பரிவாரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.