உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் கோவில் குறித்து சிறப்பு சொற்பொழிவு!

திருவொற்றியூர் கோவில் குறித்து சிறப்பு சொற்பொழிவு!

சென்னை; எழும்பூரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் வரும்  29ம் தேதி திருவெற்றியூர் கோவில் ஒரு வரலாறு பார்வை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. தமிழக தொல்லியல் துறையின் சார்பில், ஒவ்வொரு மாதமும், திங்கட் பொழிவு என்ற பெயரில் தொல்லியல் ஆய்வு குறித்த சிறப்பு சொற்பொழிவு நடக்கும். இதல் தொல்லியல் சின்னங்களில் புதைந்துள்ள வரலாற்று தகவல் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் போன்றவை குறித்து விளக்கப்படும். வரும்  29-ம் தேதி மாலை 4:00 மணிக்கு திருவொற்றியூர் கோவில் - ஒரு வரலாற்றுப்பார்வை என்ற தலைப்பில் தொல்லியல் , தொல்லியல் கல்வெட்டு  ஆய்வாளர் சிவானந்தம் பேசுகிறார் எழும்பூர் தமிழ்சாலையில்  உள்ள தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !