உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் சனிபிரதோஷ விழா!

திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் சனிபிரதோஷ விழா!

திருவேடகம்: மதுரை மாவட்டம் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் நடந்த சனிபிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து அருள்பெற்றனர். புராண வரலாற்றில் முக்கிகயத்துவம் வாய்ந்த இக்கோயிலில் ஏலவார்குழலியம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி எழுந்தருளியுள்ளனர். சனிபிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணியளவில் சிவாச்சாரியார் சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளியுள்ள நந்தீஸ்வர சுவாமிக்கு பால்,தேன், மஞ்சள்,குங்குமம் மற்றும் 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் ஓதுவார் திருப்பாசுரம் பாட, பக்தர்கள் புடைசூழ ஆடிவீதியில் ஏலவார்குழலிஅம்மன், ஏடகநாதர் சுவாமி எழுந்தருளினர். பக்தர்கள் நெய்விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி தரிசித்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டி விழா குழுவினர், கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஆலய ஊழியர்கள் செய்திருந்தனர். இதுபோல் சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோயில், பேட்டை அருணாசலஈஸ்வரர் கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் கோயில்களில் பிரதோஷவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !