புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை!
புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 26ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, கோவில் முன்பு ராகவேந்திரர் உருவம் பொறித்த படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேதவிற்பன்னர்களைக்கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்படும். முன்னதாக மிருத்திகா பிருந்தாவனத்திற்கு கொளக்குடி நரசிம்ம ஆச்சார் தலைமையில் ரகோத்தம் ஆச்சார், ரமேஷ் ஆச்சார் உள்ளிட்ட வேத விற்பன்னர்கள் பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாரதனையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் ரதோற்சவ ஊர்வலம் நடக்கிறது. ஆண்டுக்கு ஓருமுறை நடக்கும் விழா என்பதால் நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் செய்து வருகின்றனர்.