நித்யகல்யாணி சமேத வியாக்புரீச்வரர்கோவில் கும்பாபிஷேகம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே தப்பளாம்புலியூரில் மிகவும் பழமை வாய்ந்த நித்யா கல்யாணி சமேத வியாக்ரபுரீச்வர சுவாமி திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் அதி விமர்சியாக நடந்தது. சுற்றுப்பகுதியினர் ஏராளமானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் சிறப்புற விளங்கும் சைவ, வைணவ ஸ்தலங்களுள் தலைமை யாகவும், சகல மூர்த்திகளுக்கும் தலையாய மூர்த்தியாகவும், ப்ருத்வி ஷேத் ரமாகவும், ஆருர் என்றும், ஸ்ரீநகரம் என்றும் ஆடகஷேஷத்ரம் என்றும்,பல புராணங்களுடைய ஸ்ரீ தியாகேசனுடைய நிவாஸ பூசமான கமலாலய ஷேத் ரத்தின் பஞ்ச குரோசத்திற்குட் பட்டதாகவும் விளங்குகிறது. கிருதயயுகத்தில் தற்பர ன்பு லியூர் என்னும் திவ்ய ஷேத்தரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸமஸ்த ஜீவராசிகளையும், தன்னுள்ளடக்கி, தன்னுடைய கிருபாகடாஷத்ரதால் சதுர் வித புருஷார்த்தங்களையும், அடை யும் படி செய் வரும், தற்பர மகரிஷியால் பூஜிக்கப்பெற்றவரும், துவாதசி புண் ணிய கால த்தில் தைல ஸ்நானம் செய்து கொண்டு அதனால் குரூரமான புலி ஜெ ண மாவை அடைந்த காசிவாசியான ஓர் அந்தணனுக்கு, தன்னை மூன்று முறை வலம் வந்து கை கூப்பி வணங்கின மாத்திரத்தில் சாப விமே õசனம் செய்து உத்தமமான மோஷத்தை அளித்து வரும், ஏகபாத ருத்திரர் என்ற ஆபூர்வ மூர்த்தியினால் சூழப் பெற்றவரும் ஆவார்.
கருதும் அன்பர் கலி தீரப்பருக வந்த செழுந்தேனாக வேண்டுவோர்க்கு வே ண்டியவற்றை அளிப்பவரும், தன்னை தரிசித்தோர்க்கு, நித்யமான கல்யாண குணங்களை அளிப்பதால் ஸ்ரீநித்ய கல்யாணி என்ற அன்வார்த்த நாமாவோடு பிரகாசிக்கின்ற ஸ்ரீ நித்ய கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ வியா க்புரீச்வர ஸ்வ õமிக்கும் ஸஹ பாரிவார தேவதைகளுக்கும் திருப் பணிகள் செய் விக்க ப்ப ட்டு, பஞ்சவர்ணங்கள் தீட்டப்பட்டு எழில் மிகு சிவாலயத்தின் மகா கும்ப õபிஷேகம் நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ம்தேதி காலை 9.15 மணிக்கு தே வா அனு க்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் மற்றும் வா ஸ்து சாந்தி, பிரசேவபலி, ரஷசேக்ன ஹோமம் நடந்தது. அதனைத் தொடர் ந்து தினசரி காலை மாலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்து வந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு ஆறாம்கால யாக பூஜை துவங்கியது. பிம்பசுத்தி மூர்த்தி ரஷாபந்தனம் த்ரவியாஹூதி மற்றும் சிறப்பு பூஜைகள் கடம் புறப் பாடும் அதனைத்தொடர்ந்து காலை 9.30 மணி க்கு விமாத்தில் புனித நீர் ஊற் றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின் காலை10.00 மணிக்கு மூல வர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக ண க்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் மற்றும் பிரசாதங்கள் வழங் கப்பட்டது. திருவாரூரில் இருந்து சிறப்பு அரசு பஸ் இயக்கப்பட்டது.