உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நலன் வேண்டி.. நீலமங்கலம் கோவிலில் துர்கா தேவிக்கு யாகம்!

உலக நலன் வேண்டி.. நீலமங்கலம் கோவிலில் துர்கா தேவிக்கு யாகம்!

கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் உலக நலன் வேண்டி துர்கா தேவி யாகம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் துர்கா தேவி யாகம் நேற்று நடந்தது. அதிகாலை 5:30 மணியளவில் வினாயகர், வள்ளி தெய்வாணை முருகன், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து புன்னியாவதனம், அனுக்ஞை, மகாசங்கல்பம் பூஜைகளுக்குப்பின் கும்ப கலசங்களில் துர்கை அம்மனை எழுந்தருளச் செய்து, அரளிப்பூ க்களால் பூஜைகள் நடந்தது.உலக நலன் வேண்டி நடந்த துர்காதேவி யாகத்தில் 108 மூலிகைப் பொருட்கள், 16 பழ வகைகள், மகாபூர்ணாகுதி செய்து, பட்டுப்புடவை ஆகியவை யாகத்தில் சேர்க்கப்பட்டது. இதன்பின் துர்கை அம்மனுக்கு திரிசூலம் வைத்து, கலச அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து அர்ச்சனை, மகாதீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !