கூவாகம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4180 days ago
திருவெண்ணெய்நல்லூர்: பிரசித்தி பெற்ற, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம், விமரிசையாக நேற்று நடந்தது. கடந்த 2000ம் ஆண்டு, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 13 ஆண்டுகளுக்குப்பின், 10 லட்சம் ரூபாய் செலவில், கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை, 10:50 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில், வரும் 29ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்குகிறது. 30ம் தேதி, பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும், மே 13ம் தேதி இரவு, சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கு, பல இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள், பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மே 14ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது.