மணலி புதுநகரில் மழை வேண்டி தியானம்!
ADDED :4180 days ago
மணலி புதுநகர் : மழை வேண்டி, மணலி புதுநகரில், அய்யா வழி பக்தர்கள், இரண்டு மணிநேரம் தியானம் மேற்கொண்டனர். மணலி புதுநகரில், அய்யா வைகுண்டசாமி கோவிலில், மழை வேண்டி, நேற்று சிறப்பு தியானம் நடந்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து, 400க்கும் மேற்பட்ட அய்யா வழி பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அனைவருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது.