உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டீஸ்வரர் கோவிலில் குடிநீர் வசதியில்லை: பக்தர்கள் அவதி!

பட்டீஸ்வரர் கோவிலில் குடிநீர் வசதியில்லை: பக்தர்கள் அவதி!

பேரூர் : குடிநீர் வசதி இல்லாததால், பேரூர் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். கொங்கு மண்டலத்தில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பட்டீஸ்வரரை வந்து தரிசிக்கின்றனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், போதுமான குடிநீர் வசதி செய்து தரவில்லையென புகார் எழுந்துள்ளது. கோவிலின் மடப்பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள தண்ணீர் உப்பு தண்ணீர் எனவும், குடிக்க முடிவதில்லையெனவும் பக்தர்கள் புலம்புகின்றனர்.சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “பல்வேறு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு, கோவிலில் குடிநீர் வசதியில்லை. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள பைப்பில் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், உவர்ப்புத்தன்மை அதிகமாக உள்ளது. ஏற்கனவே, இரண்டு சிறுவாணி குடிநீர் இணைப்பு இருந்தும், பக்தர்களால் ஏராளமான வருவாய் இருந்தும், கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !