மழை வேண்டி மதுரையில் யாகம்!
ADDED :4181 days ago
மதுரை : மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சார்பில், மழை வேண்டி இன்று(ஏப்., 28) சிறப்பு யாகம் நடக்கிறது.அதிகாலை 5.55 மணிக்கு தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. முக்தீஸ்வரர், திருவாப்புடையார், திருமறைநாதர் கோயில்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன.மீனாட்சி கோயில் சுவாமி சன்னதி வீரவசந்தராயர் மண்டபத்தில், நந்திக்கு நீர் நிரப்பி வழிபாடு நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை மற்றும் திருஞான சம்பந்தர் இயற்றிய 12ம் திருமுறை மேகராககுருச்சிப்பண் ஓதப்படுகிறது. இசை வழிபாடும் நடக்கிறது.