உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்!

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்!

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, மே மாதம், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 13ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, வரும், 3ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 10ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, தெய்வானை அம்மையாரின் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 11ம் தேதி இரவு, சண்முக சுவாமி உற்சவமும், 12ம் தேதி காலை, சுப்ரமணிய சுவாமி உற்சவமும் நடைபெறுகின்றன. இதுதவிர, 3ம் தேதி முதல், 11ம் தேதி வரை, காலை மற்றும் மாலை நேரங்களில், பல்வேறு வாகனங்களில் உற்சவ பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தேதி நேரம் உற்சவ விவரம்
மே.3 காலை கொடியேற்றம் இரவு கேடய உலா
4 காலை வெள்ளி சூர்ய பிரபை இரவு பூத வாகனம்
5 காலை சிம்ம வாகனம் இரவு ஆட்டுக்கிடாய வாகனம்
6 காலை பல்லக்கு சேவை இரவு வெள்ளி வாகனம்
7 காலை அன்ன வாகனம் இரவு வெள்ளி மயில் வாகனம்
8 மாலை புலி வாகனம் இரவு யானை வாகனம்
9 இரவு தங்கத்தேர்
10 காலை யாளி வாகனம் இரவு (7:00) குதிரை வாகனம் இரவு (8:00) தெய்வானை திருக்கல்யாணம்
11 காலை கேடய உலா மாலை கதம்பப் பொடி விழா இரவு சண்முக சுவாமி உற்சவம்
12 காலை தீர்த்தவாரி சுப்பிரமணிய சுவாமி உற்சவம் இரவு கொடி இறக்கம்
13 மாலை சப்தாபரணம், காதம்பரி விழா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !