பெருமாள் கோவிலில் சிறுவர்கள் உழவாரப்பணி
ஈரோடு: பெருமாள் கோவிலில், பெரியவர்களுடன் இணைந்து, சிறுவர்களும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு, சுத்தம் செய்வதற்காக, தனியாக நிதி ஏதும் ஒதுக்கீடு செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் அதிகம் பயன்படுத்தாத கட்டிட பகுதியில், ஒட்டடை பிடித்தல், கோபுரங்களில் அழுக்கு, தூசு படிவதும், சுவர்களில் எண்ணெய் கரைகள் போன்றவை ஏற்படுகிறது. கோவிலை தூய்மைப்படுத்தும் பணியை, சிலர் தானாக முன் வந்து செய்கின்றனர். அதுபோல், ஈரோட்டில் உள்ள திருவரங்கன் உழவாரப்பணிக்குழு சார்பில், ஒவ்வொரு மாதமும், நான்காவது வாரஞாயிற்று கிழமை, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில், உழவாராப்பணி நடக்கிறது. இதில், ஐந்து வயது குழந்தை முதல், 80 வயது வரைஉள்ள ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும், உழவாரப்பணி செய்ய, அழைப்பு விடுச்த்துள்ளது. 101வது வாரமாக, உழவாராப்பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. காலை, எட்டு முதல் மாலை, ஆறு மணி வரைபணிகள் தொடர்ந்தது. தவிர, சித்தோடு சாய்பாபா சமிதி சார்பில், பள்ளி மாணவர்கள், பத்துப்பேர், குடும் ப தலைவிகள், கோவில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். ஒட்டடை அடித்தல், சுவற்றை தண்ணீர் கொண்டு கழுவி விட்டு, சுத்தம் செய்தல், கோபுரங்களில் படிந்துள்ள தூசிகளை மாணவர்கள் சுத்தம் செய்தனர். மேலும், துணி சுவைத்தல், தரையை பெருக்கி, கழுவுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாதமும், நான்காவது வாரஞாயிற்று கிழமை, இது போன்ற உழவாராப்பணி தொடர்ந்து நடைபெறும், என்று திருவரங்கம் உழவாரப்பணி குழு நிர்வாகி கணேஷ்குமார் தெரிவித்தார்.