உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவிலில் மே 3ல் பிரம்மோற்சவம்!

வேதகிரீஸ்வரர் கோவிலில் மே 3ல் பிரம்மோற்சவம்!

திருக்கழுக்குன்றம் :வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, மே மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த, 2011ஆம் ஆண்டில் கோவில் திருப்பணி தொடங்கியதால், மூன்று ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. கடந்த செப்., 15ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த ஆண்டு, மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை, கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.

தேதி நேரம் நிகழ்ச்சி
மே 3 காலை பல்லக்கு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவம்
மே 4 காலை பவழக்கால் சப்பரம் இரவு பூதவாகனம்
மே 5 காலை 63 நாயன்மார்கள் கிரி பிரதஷனம் இரவு சந்திர பிரபை உற்சவம்
மே 6 காலை புருஷாமிருகம் இரவு நாக வாகனம்
மே 7 காலை கதலி விருட்சம் இரவு வெள்ளி ரிஷப வாகனம்
மே 8 காலை விமானம் இரவு யானை வாகனம்
மே 9 காலை பஞ்ச ரத உற்சவம் இரவு தந்தத்தொட்டி
மே 10 காலை தந்தத்தொட்டி இரவு குதிரை வாகனம்
மே 11 காலை தந்தத்தொட்டி இரவு பிஷாடனர் அலங்கார விமானம்
மே 12 காலை சபா நாயகர் சூரிய பிரபை இரவு ராவேனேஸ்வர வாகனம் கிரிபிரதஷனம்
மே 13 காலை பஞ்சமூர்த்திகள் மகாபிஷேகம் இரவு நுாதன விமானம் பந்தம்பரி உற்சவம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !