பாண்டமங்கலம் கோயிலில் சனி பிரதோஷம்
ADDED :4183 days ago
பரமத்திவேலூர் : நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் , நன்செய் இடையாறு, மாவுரொட்டி , பில்லூர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சனி பிரதோஷம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், நந்தி பகவானுக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன.அலங்கரிக்கப்பட்ட தேரில் கோயிலைச் சுற்றி காசி விஸ்வநாதர் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.