உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவ சுவாமி கோவிலில் 4 ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்!

வீரராகவ சுவாமி கோவிலில் 4 ம் தேதி பிரம்மோற்சவம் துவக்கம்!

திருவள்ளூர் : வீரராகவ சுவாமி கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், வரும், 4ம் தேதி கொடியேற்றதுடன் விழா துவங்குகிறது.திருவள்ளூர் தேரடியில் உள்ள, வீரராகவ சுவாமி கோவிலில், இந்தாண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், வரும், 4ம் தேதி, அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் மூலவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவர் தினசரி, காலை மற்றும் இரவு ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு திருத்தேரில் உற்சவர் பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.

தேதி நேரம் நிகழ்ச்சி
மே 4 காலை தங்கச் சப்பரம் மாலை சிம்ச வாகனம்
மே 5 காலை அம்ச வாகனம் இரவு சூர்ய பிரபை
மே 6 காலை கருடசேவை இரவு அனுந்த வாகனம்
காலை சேஷ வாகனம் இரவு சந்திரபிரபை
காலை நாச்சியார் திருக்கோலம் இரவு யாளி வாகனம்
காலை வெள்ளி சப்பரம் இரவு யானை வாகனம்
காலை திருத்தேர் இரவு திருத்தேர் கோவிலுக்கு எழுந்தருளல்
மே 11 காலை திருப்பாதம்சாடி திருமஞ்சனம் இரவு குதிரை வாகனம்
மே 12 காலை ஆன்மேல் பல்லக்கு இரவு விஜயகோடி விமானம்
மே 13 காலை தீனாதசாராதனம் இரவு த்வஜ அவரோஹனம்
மே 14 மாலை விடையாற்றி முதல் நாள் திருமஞ்சனம்
மே 15 மாலை விடையாற்றி 2ம் நாள் திருமஞ்சனம்
மே 16 மாலை புஷ்ப பல்லக்கு புறப்பாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !