உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டவர் கோவில் விழா மண் குதிரை சுமந்த பக்தர்கள்!

பெரியாண்டவர் கோவில் விழா மண் குதிரை சுமந்த பக்தர்கள்!

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த ஸ்ரீபெரியாண்டவர் கோவில், 22ம் ஆண்டு திருவிழாவில், பக்தர்கள் மண் குதிரைகளை, தங்களது தலையில் சுமந்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். தர்மபுரியை அடுத்த எட்டிகானூர் ஸ்ரீபெரியாண்டவர் கோவில், சித்திரை திருவிழா, இரண்டு ஆண்டுக்கு, ஒரு முறை நடந்து வருகிறது. இந்தாண்டு ஸ்ரீபெரியாண்டவர் கோவில் சித்திரை திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் கிணறு தோண்டி, தண்ணீர் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான நேற்று ஸ்வாமி ஊர்வலம் மற்றும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்த மண் குதிரைகளை தலையில் சுமந்து செல்லுதல், வேப்பிலை சுமந்து செல்லுதல், பன்றி குத்துதல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியும், மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகளும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால், மண் குதிரைகளை தலையில் சுமந்து சென்றனர். இதில், எட்டிகானூர் உட்பட தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !