உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி வீடுவீடாக சென்று, மழைச்சோறு வாங்கி வழிபாடு!

மழை வேண்டி வீடுவீடாக சென்று, மழைச்சோறு வாங்கி வழிபாடு!

தாராபுரம்: தாராபுரத்தில், விவசாய கூலித்தொழிலாளர்கள், மழை வேண்டி, வீடுவீடாக சென்று, மழைச்சோறு வாங்கி, வருண பகவானை வழிப்பட்டனர். தாராபுரம், கொளிஞ்சிவாடி பகுதியில், விவசாய கூலித்தொழிலாளர்கள், நில குத்தகைதாரர்கள் வசிக்கின்றனர். கடந்த, இரு ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய கூலித்தொழிலாளர்கள், போதிய வருமானம் இன்றி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வீடுகளில் சேகரிக்கப்பட்ட மழைச்சோறை, ஒரு பானையில் போட்டு, பெண்களும், குழந்தைகளும், சுற்றிலும் நின்று, கும்மியடித்து, பாட்டுப்பாடி, அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !