ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் திருவிழா
ADDED :4184 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊத்துக்காட்டில் தேவிஸ்ரீ எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் வாகனத்தில் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய அம்சமாக திங்கள்கிழமை இரவு அமாவாசை திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், திருவாள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளுக்காக பொங்கலிட்டு, முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்தார்.