உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலம்பும் கண்ணகி கோயில் பக்தர்கள்!

புலம்பும் கண்ணகி கோயில் பக்தர்கள்!

கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு, இரு மாநில அதிகாரிகளும் அனுமதி வழங்கவில்லை, என பக்தர்கள் புலம்பினர். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயிலுக்கு, மே மாதம் 14ம் தேதி நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்ள, தமிழக மற்றும் கேரள பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். விழாவில், கட்டுப்பாடுகள் குறித்து, இரு மாநில கலெக்டர்கள் தலைமையில் தேக்கடியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் எதற்கும் அனுமதி வழங்கவில்லை. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இரண்டு நாட்கள் விழா நடத்த கேட்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக பக்தர்களின் முக்கியமானதாக உள்ள பொங்கல் வைப்பதற்கு, 6 பேருக்கு அனுமதி வழங்க கேட்டதற்கு, 3 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கினர். முக்கிய பூஜை நடக்கும் போது, மேளம் அடிக்க கேட்கப்பட்ட அனுமதியையும் இரு மாநில அதிகாரிகளும் மறுத்து விட்டனர். பக்தர்கள் அதிகமாக வருவதால், அன்னதானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !