அரவக்குறிச்சி மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :4183 days ago
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி மகா மாரியம்மன், பகவதி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 20--ம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக மகா மாரியம்மன் கரகம் பாலித்தல், சக்தி அழைத்தல், வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று மாலையில் மாவிளக்கு, பொங்கல், கிடா வெட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு மகா மாரியம்மன் கரகம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மண்டகப்படி சிறப்பு வழிபாடு மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.