மானாமதுரையில் மே 2ல் சித்திரை விழா தொடக்கம்!
ADDED :4183 days ago
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதஸ்வாமி கோவிலில் மே 2ம்தேதி விழா துவங்கி மே 12ம் தேதி வரை நடக்கிறது. மே 2 மாலை 6 மணி முதல் 7 மணி வரை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி நடைபெற்று உற்சவத்தின் முதல் திருநாளான மே 3ம் தேதி காலை 8 மணி முதல் 8.25 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.இதை தொடர்ந்த ஏழு நாட்கள் கற்பக விருஷம், சிம்ம வாகனம்,பூத வாகனம்,குதிரை வாகனம், கைலாச வாகனம்,கமல வாகனம்,யானை வாகனம்,கிளி வாகனம்,இரண்டு குதிரை வாகனம்,இரண்டு விருஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. எட்டாம் நாள் (மே 10) காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம் இரவு யானை வாகனம் புஷ்ப பல்லக்கு நடைபெறும். ஒன்பதாம் நாள் காலை 9 மணி முதல் 10 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் இரவில் தேர் தடம் பார்த்தலும் நடைபெறும்.