மன்னம்பந்தல் தட்சிணாமூர்த்தி கோயிலில் ஆண்டு விழா
ADDED :4182 days ago
மயிலாடுதுறை ; மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் அருள்மிகு மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் 185-வது ஆண்டு அன்னதான பெருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். முன்னதாக மேதா தட்சிணாமூர்த்தி கோயில் மற்றும் மன்னம்பந்தல் அருள்மிகு நடன விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.தொடர்ந்து, மாவினால் உருவாக்கப்பட்ட சீராளத்தேவனின் உருவம் நடன விநாயகர் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அருள்மிகு உத்திராபதீஸ்வரருக்கு அமுது படையல் செய்யும் விழாவும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.