பழநி கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
ADDED :4226 days ago
பழநி: சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து பழநி மலைக் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் ராஜகோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வின்ச், ரோப்கார், யானைப்பாதை, படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களை போலீசார் சோதனை செய்த பின்னர் அனுமதிக்கின்றனர். கொடைக்கானல் ரோடு, கோவை பைபாஸ் ரோடு, பஸ்ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.