துடைப்பத்தால் அடிக்கும் வினோத திருவிழா!
ADDED :4178 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல்விழாவில் மாமன்-மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் பொங்கல் விழா மூன்றுநாட்கள் நடந்தது. விழாவின் கடைசி நாளில் துடைப்பத்தால் அடித்துக்öõள்ளும் வினோத நிகழ்ச்சி நடந்தது.
மாமன்-மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள்,கோவில் முன் கூடி ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் சேற்றை பூசிச்கொண்டனர். துடைப்பத்தால் அடிக்கும் போது அடிபடுவர் கோபப்படாமல் இருந்தால் அவரின் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.