உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா!

உத்திராபதீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா!

மந்தாரக்குப்பம்: சேப்ளாநத்தம் உத்திராபதீஸ்வரர் கோவிலில் சிறுதொண்ட நாயனார் அமுது படையல் விழா நடந்தது.கடந்த 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வந்தது. கடந்த 29ம் @ததி பக்தர்கள் சிறுதொண்ட நாயனார், சீராளன் வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் நடந்த அமுது படையல் நிகழ்ச்சியில், பிள்ளைக் கறி சாதம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தை பாக்கியம்  இல்லாதவர்கள், ஈரத்துணியுடன் விரதம் இருந்து, உத்திராபதீஸ்வரை வழிபட்டு, பரணி நட்சத்திரத்தில் பிரசாதம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏராளமான பெண்கள் மடி பிச்சை வாங்கி, துர்க்கை அம்மன் முன் உண்டனர். பக்தர்கள், குழந்தையின் எடைக்கு எடை பொற்காசுகள் கொடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் பெற்ற 37 பெண்கள், நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !