உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாக்கின்றனர்.இக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் சுவாமி - அம்பாள் சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். விழாவையொட்டி, தினமும் காலை, மாலையில் கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, வெள்ளி ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக மே 8 ல், பிச்சாண்டவர் புஷ்பச் சப்பரத்திலும், மே 9 ல், இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 10ல், மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்துடன், 6.15 மணிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மாலை புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெறும். மே 11ல், காலை 9 மணிக்கு தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரியும், மாலை ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மே 13 ல், காலை 12 மணிக்கு உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகளுடன், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !