ஆட்சீஸ்வரர் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா
ADDED :4177 days ago
மதுராந்தகம் : மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகுகிறது. பல்வேறு வாகனங்களில் ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் சமேதராய் அருள்பாலிப்பார். தொடர்ந்து வரும் 9--ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.வரும் 14-ஆம் தேதி நிறைவடைகிறது.