அறந்தாங்கி பச்சைகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா
ADDED :4177 days ago
அறந்தாங்கி : அறந்தாங்கி அ பிள்ளைதாச்சி அம்மன், பச்சைகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 2-ம் நாள் விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.புதுத்தெரு, பெரியார்தெரு, களப்பாகாடு, என்.ஜி.ஓ காலனியினரின் இரண்டாம் நாள் மண்டகப்படிதாரர்களின் விழாவை முன்னிட்டு, பிள்ளைதாச்சி அம்மன் மற்றும் பச்சைகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இரவு, காளை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.